மணிகண்டனின் 'குடும்பஸ்தன்' 2-வது பாடல் வெளியானது

2 weeks ago 4

சென்னை,

தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம்' என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் மணிகண்டன். அதனை தொடர்ந்து கதாநாயகனாக லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். இவர் தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு 'குடும்பஸ்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் 'ஜீரோ பேலன்ஸ் ஹீரோ' பாடல் வெளியாகி வைரலானது. இப்படம் வரும் 24-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் குரலில் குடும்பஸ்தன் படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. படத்தின் 2வது பாடலான 'கண்ண கட்டிகிட்டு' பாடலை வைசாக் எழுதியுள்ளார். இது குறித்த பதிவை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

True love is when a couple come together to overcome all their troubles ❤️Here's #KannaKattikittu - the second single from #Kudumbasthan! ▶️ https://t.co/fO8wkk7hxiA @VaisaghOfficial musical! Sung by @gvprakash. Film in theatres from 24th January! pic.twitter.com/YCzGNeW7AK

— Cinemakaaran (@Cinemakaaranoff) January 15, 2025
Read Entire Article