கோவாவில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

2 hours ago 1

பனாஜி,

கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் போதைப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடக்கு கோவாவில் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் சுற்றுலா விசா மூலம் இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த செபாஸ்தியன் ஹெஸ்லர் (வயது 45) என்ற நபர் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் நேற்று இரவு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, அவரிடமிருந்து 2 கிலோ அளவிலான கஞ்சா, கெட்டமைன் பவுடர், கெட்டமைன் லிக்விட் ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.24 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article