மணல் முறைகேடு குறித்து புகார் தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் மீது நடுரோட்டில் சரமாரி தாக்குதல்

4 weeks ago 7


திருமலை: ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம் அமதலவலசா சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டவர் சுரேஷ். இவர் ரகோலு பகுதிகளில் மணல் பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக இணை கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் பதுக்கி வைத்திருந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் சுரேஷ் தனது நண்பர் சந்திராவுடன் நேற்று காரில் ரகோலு கிராமத்திற்கு சென்றார். அப்ேபாது அங்கு வந்த 30 பேர் கொண்ட கும்பல், சுரேஷை சரமாரியாக தாக்க முயன்றனர். இதனால் சுரேஷ் காரில் ஏறி எஸ்பி அலுவலகம் சென்றார். ஆனால் அவரை பைக்கில் சிலர் விரட்டிச்சென்று காகுளம் பாலகா அருகே தடுத்து நிறுத்தினர். பின்னர் கார் கண்ணாடிகளை உடைத்தனர். உள்ளே இருந்த சுரேஷை வெளியே இழுத்து அருகில் உள்ள கால்வாயில் தள்ளி சரமாரியாக தாக்கினர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் விரைந்து வந்து சுரேஷை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சுரேஷை ரிம்ஸ் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் இருந்தே மணல் முறைகேடுகளுக்கு எதிராக நான் போராடி வருகிறேன். ஆட்சி மாறிய பிறகும் தொடர்ந்து போராடி வருகிறேன். மணலுக்கு எதிராக போராடி வருவதால் சம்பந்தப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவுக்கு ₹50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் என்னை கொல்ல முயற்சிக்கின்றனர்.

The post மணல் முறைகேடு குறித்து புகார் தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் மீது நடுரோட்டில் சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article