மணலி மண்டலம் 19வது வார்டில் மாநகராட்சி குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

15 hours ago 2

திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலம் 19வது வார்டு, மாசிலாமணி நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குளம் 50 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்க மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் குளத்தை தனியார் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அந்த இடத்தில் கொட்டகை அமைத்திருந்தார். இதுபற்றி அறிந்ததும் சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் காட்டாரவி தேஜா தலைமையில் உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் மாசிலாமணி நகருக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் ஆய்வு செய்து மாநகராட்சி குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அதிகாரிகள் கூறுகையில், ‘’ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட குளத்தில் தூர்வாரி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். யாராவது குளத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post மணலி மண்டலம் 19வது வார்டில் மாநகராட்சி குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article