மணமேல்குடியில் தமிழர்தேசம் கட்சி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

3 months ago 15

 

அறந்தாங்கி,அக்.15: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடியில் தமிழர்தேசம் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மணமேல்குடியில் உள்ள தனியார் திருமண மஹாலில் கிழக்கு மாவட்ட செயலாளர் பட்டங்காடு விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழர் தேசம் கட்சியின் மாநிலதலைவர் கே.கே. செல்வகுமார் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உதவிசெய்ய துறை சார்ந்த அதிகாரிகளை அணுக வேண்டும். சாதி மத பாகுபாடின்றி மக்கள் பணி செய்வதோடு உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் முழுமையாக துணை நிற்க வேண்டும் என்பன குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன், மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில அமைப்பு செயலாளர் செம்.மகிடேஸ்வரன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் பழனிராஜா, மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் திருமுருகன், கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் அஜய்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், அரவிந்த், பசுபதி, தர்மராஜ் மற்றும் கருப்பையா, தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மணமேல்குடியில் தமிழர்தேசம் கட்சி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article