மணமகனின் 'சிபில்' ஸ்கோர் குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்

3 hours ago 1

மும்பை,

வங்கி கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டு, கடன் தொகை எவ்வாறு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது என்பதை 'சிபில்' ஸ்கோர் மூலம் அறிந்து கொள்ளலாம். 'சிபில்' ஸ்கோர் என்பது, ஒரு நபரின் கடன் வரலாற்றை அடிப்படையாக கொண்ட அறிக்கை ஆகும். இது 300 முதல் 900 வரை மதிப்பிடப்படுகிறது. 'சிபில்' ஸ்கோர் அதிகமாக இருந்தால், கடன் அல்லது கிரெடிட் கார்டு பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்த நிலையில், மணமகனின் 'சிபில்' ஸ்கோர் குறைவாக இருந்ததால் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் மராட்டிய மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. முர்திசாபூர் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணமகள் வீட்டார் மணமகனின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளனர்.

இதன்படி மணமகனின் 'சிபில்' ஸ்கோரை அவர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். இந்நிலையில், அந்த இளைஞரின் 'சிபில்' ஸ்கோர் குறைவாக இருந்தது மட்டுமின்றி, அவருக்கு நிறைய கடன்கள் நிலுவையில் இருந்தது பெண் வீட்டாருக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக பெண் வீட்டார் திருமணத்தை அதிரடியாக நிறுத்தியுள்ளனர்.

"ஒருவரால் தனது கடன்களை சரியாக திருப்பி செலுத்த முடியவில்லை என்றால், அவர் எப்படி தனது மனைவிக்கு நிதி பாதுகாப்பை வழங்குவார்?" என்று மணமகளின் மாமா கேள்வி எழுப்பினார். இதனை ஏற்றுக் கொண்டு மணமகளின் குடும்பத்தினர் உடனடியாக திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article