தேவையான பொருட்கள்
1/2 கிலோ மட்டன் (சாப்ஸ் பகுதி சிறந்தது)
2 ஸ்பூன் நெய்
1 ஸ்பூன் எண்ணெய்
தேவையான அளவுஉப்பு
தேவையான அளவுமுந்திரி
1 கப் தயிர்
2 வெங்காயம்
1 தக்காளி
1இஞ்சி பூண்டு விழுது
½ ஸ்பூன் மஞ்சள் தூள்
1 துண்டு பட்டை
2 ஏலக்காய்
2 கிராம்பு
1 பிரிஞ்சி இலை
1 ஸ்பூன் மல்லி தூள்
1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
1/2 சீரகத் தூள்
செய்முறை:
மட்ட துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.கடாயில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும், பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பொடி வகைகளை சேர்க்கவும்.தக்காளியை கொர கொரப்பாக அரைத்து,உப்புடன் நன்கு வதக்கவும். வேக வைத்த மட்டனை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.முந்திரி பருப்பை, தயிருடன் அரைத்து, மட்டனுடன் சேர்த்து 5 முதல் 7 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.இது தோசை உடன் சுவைக்கவும்,அல்லது புலாவுடன் சுவைக்கவும் நன்றாக இருக்கும்.
The post மட்டன் ஜகங்கிரி appeared first on Dinakaran.