மடியில் உட்கார சொன்ன இயக்குனர் - ஆடிஷனில் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை

20 hours ago 2

சென்னை,

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'சிக்கந்தர்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருப்பவர் நடிகை ஸ்ரேயா குப்தோ. இவர் தமிழில், தர்பார், ரோமியோ ஜூனியட், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சென்னையில் ஒரு படத்திற்கு ஆடிஷன் சென்றபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை நடிகை ஸ்ரேயா குப்தோ பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

'2014-ல், நான் ஒரு இயக்குனர் அலுவலகத்திற்கு ஒரு ஆடிஷனுக்காக சென்றிருந்தேன். முன்பெல்லாம் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆடிஷனுக்கு நேரடியாக அழைப்பார்கள். நான் என் அம்மாவுடன் அந்த ஆடிஷனுக்கு சென்றேன். நான் கேபினுக்குள் நுழைந்ததும், இயக்குனர் என்னிடம், 'என் மடியில் உட்காரு' என்றார். அப்போது என்ன பண்ணுவதென்றே எனக்கு தெரியவில்லை, மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே நான் அங்கிருந்து சென்றுவிடேன்' என்றார்.


Read Entire Article