மடிக்கணினியால் ஏற்படும் பாதிப்புகள்

3 months ago 20

வீட்டிலிருந்தே வேலை செய்யும் வழக்கம் கொரோனா காலத்திற்குப் பிறகு அதிகமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனாலேயே லேப்டாப் பயன்பாடும் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது. இதில் ஆண்-பெண் வித்யாசமே இல்லாமல், இருவருமே லேப்டாப்பை அதிகம் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். இதை மடிக்கணினி என்று அழைத்தாலும், அடிக்கடி மடியில் வைத்து பயன்படுத்துவது நல்லதல்ல.நீங்கள் அவ்வாறு மடிக்கணினியை பயன்படுத்தும் பெண் என்றால் பின் வரும் எச்சரிக்கை குறிப்புகளை அறிந்து விழிப்புணர்வைப் பெறுங்கள்.

மடிக் கணினியை அதிக நேரம் மடியில் வைத்து வேலை செய்தால், நாளடைவில் பல உடல் நல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். தொடர்ந்து மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு கருத்தரிப்பில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் மடிக்கணினியின் , எப்போதுமான கணினியை விட அதீத வெப்பத்தை வெளியிடும். அதீத வெப்பம் கருமுட்டைகள் உருவாவதில் சிக்கலை உண்டாக்கும். கர்ப்பிணிப் பெண்களும் மடிக்கணினியை வைத்து வேலை செய்தால் உயிரணுக்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். இது கருவுறுதல் வாய்ப்பை குறைக்கிறது. இந்த நிலை ஆண்களிலும் உண்டு.

பொதுவாக மடிக் கணினியை அந்தரங்க பாகங்களுக்கு அருகில் வைப்பதால் செல்கள் வெப்பத்தால் செயலிழக்கும் அபாயம் ஏற்படும். மேலும் ஆண்களின் சருமத்தை விடவும் பெண்களின் சருமம் மென்மையானது என்பதால் மடிக்கணினி வெளியிடும் வெப்பமானது முகச் சருமத்தின் தன்மையை மாற்றிவிடும். மேலும் முகக் கருமை, வறட்சி, செல்கள் சேதமடைதல், பருக்கள் இப்படிப் பலப் பிரச்னைகளை உண்டாக்கும். அவ்வப்போது மடிக்கணினிக்கு ஓய்வு கொடுங்கள். மேலும் மடியில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். குளிர்வான இடத்தில் கணினி, மடிக்கணினி இரண்டையும் வைத்து வேலை செய்வதும் கூட மிக முக்கியம்.
– அ.ப. ஜெயபால்

The post மடிக்கணினியால் ஏற்படும் பாதிப்புகள் appeared first on Dinakaran.

Read Entire Article