மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல் சாமியா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்

1 month ago 4

சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: மருத்துவ துறையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை படைத்துவருவது மக்களுக்கு புரிகிறது. சில மண்டூளிகளுக்கு புரியவில்லை. இத்துறையின் சாதனையை சொன்னால் பட்டியல் நீளும் எடப்பாடிக்கு நாக்கு தள்ளும். மக்களைத்தேடி மருத்துவம் ஐக்கிய நாடுகள் சபையில் பாராட்டுப்பெற்று விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை – 614, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 545.

அதேபோல் மகப்பேறு துறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ் தமிழகம் இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை – 84, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 55. தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்காக ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர்காய நினைக்காதீர்கள். எதிர்கட்சித் தலைவர் என்பதை உணராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே மனதில் கொண்டு எதையும் அறியாமல் புரியாமல் அறிக்கை வெளியிடுவது காரணமாக எடப்பாடி பழனிசாமி – எரிச்சல்சாமியாக மக்களுக்கு காட்சியளிக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல் சாமியா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article