மக்கள் குறைதீர் கூட்டம் 323 மனுக்கள் பெறப்பட்டன

3 hours ago 1

 

திண்டுக்கல், பிப். 25: திண்டுக்கல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 323 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 323 மனுக்கள் பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறப்பு மகளிர் முதியோர் சுய உதவிக்குழு வாழ்வாதார நிதியாக 5 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம், ஒருவருக்கு கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.6,357 மதிப்பில் தையல் இயந்திரம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், தனித்துணை ஆட்சியர் கங்காதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டம் 323 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Read Entire Article