மக்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் - விமானப்படை அதிகாரி

18 hours ago 4

அலை அலையாக டிரோன்களை ஏவி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவைகளை இடைமறித்து வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா. நாம் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கினோம். ஆனால், பாகிஸ்தான் மக்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானில் பல விமானப்படை தளங்களை தாக்கி அழித்தது இந்தியா. சண்டையை நிறுத்த பாகிஸ்தான் அவசர கோரிக்கை விடுத்தது. பாக். அத்துமீறலுக்குப் பிறகு படைகளை வலுப்படுத்தினோம். எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்தோம். மே 7 முதல் 10 வரை 40 வீரர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல். பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது இந்தியா தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. நமது தாக்குதல் பயங்கரவாதிகள் மீது மட்டும்தான், ராணுவத்தின் மீது அல்ல என்று இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி கூறியுள்ளார்.

Read Entire Article