தரிகொண்ட வெங்கமாம்பா பிறந்தநாள் கொண்டாட்டம்.. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி

4 hours ago 2

திருப்பதி ஏழுமலையானின் பெருமையை போற்றி பல பாடல்களை இயற்றியவர் துறவி கவிதாயினி தரிகொண்ட வெங்கமாம்பா. ஏழுமலையான் கோவிலில் முதல் முதலில் அன்னதானத்திட்டத்தை தொடங்கி வைத்தவரும், வெங்கடாசலபதியின் தீவிர பக்தையுமான தரிகொண்ட வெங்கமாம்பாவின் 295-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி சிறப்பு அலங்காரத்துடன் நாராயணகிரி தோட்டத்திற்கு வந்தடைந்தார். அப்போது அன்னமாச்சார்யா திட்டம் மற்றும் எஸ்.வி. இசை மற்றும் நடனக் கல்லூரியைச் சேர்ந்த கலைஞர்கள், தரிகொண்ட வெங்கமாம்பா இயற்றிய பக்திப் பாடல்களை பாடினர்.

பெங்களூரு ராகவேந்திர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சுவித்யேந்திர தீர்த்த சுவாமிகள் சிறப்பு சொற்பொழிவாற்றினார். முறையான குரு இல்லாமல் ஆன்மீக ஞானத்தை அடைந்த தெய்வீக பிறவி என வெங்கமாம்பாவுக்கு புகழாரம் சூட்டினார்.

முன்னதாக தரிகொண்ட பிருந்தாவனத்தில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா திருவுருவச் சிலைக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

Read Entire Article