மக்களை ஏமாற்றவே, நீட் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் - எடப்பாடி பழனிசாமி

1 month ago 11

சென்னை,

எதிர்க்கட்சித்தலைவர் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கோஷங்களை எழுப்பு தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது. உண்மை நிலையை சட்டசபையில் பேசினால் வெளியே வரும் அல்லவா?* மக்கள் பிரச்சனையில் எந்த பாகுபாடும் காட்டாமல் நாங்கள் குரல் எழுப்பி வருகிறோம். தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க. அரசு வாக்குறுதி தந்தது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தங்களிடம் ரகசியம் இருப்பதாக உதயநிதி கூறினார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குக்காக பேசிய முதலமைச்சர், தற்போது வேறு வழியின்றி அனைத்து கட்சி கூட்டம் கூட்டி உள்ளார். நீட் விவகார வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக கூறிவிட்டு இப்போது கூட்டம் ஏன்? மக்களை ஏமாற்றுவதற்காகவே அனைத்து கட்சி சட்டமன்ற குழு தலைவர்கள் கூட்டம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வந்த பின்பு என இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி தி.மு.க. தான்."

இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article