“மக்களுக்கு நல்லது செய்யவிடாமல் அதிமுகவினர், அதிகாரிகளுக்கு மிரட்டல்...” - செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

2 hours ago 2

மதுரை: “மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் போலீஸார், மக்களுக்காக பணிபுரிய வேண்டும். திமுகவினர் சொல்வதை கேட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீங்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்,” என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.

மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நீர் மோர் பந்தலை திறந்து வைத்த செல்லூர் ராஜூ கூறியது: “மதுரை விளாங்குடி பகுதியில் ஏற்கெனவே காவல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துதான் பொதுமக்களுக்கான நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தோம். திறந்து வைத்த 2 நாட்களில் தமிழகத்தில் எங்குமே இல்லாத அளவில் கூடல்புதூர் காவல்துறையினர் நீர்-மோர் பந்தலை அகற்றினர்.

Read Entire Article