மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து

3 hours ago 2

லக்னோ,

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற்ற உள்ளது.

இந்நிலையில், மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கியாஸ் சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், யாருக்கும் காயம் உள்பட பாதிப்பும் ஏற்படவில்லை.  

Read Entire Article