வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றிப் பெற்றார். அவர் நாளை (திங்கட்கிழமை) அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த விழாவில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பலருக்கும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், பெரும் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகிய இருவரும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் இருவரும் நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில், பதவியேற்பு விழாவுக்கு முன்பாக துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸ் வாஷிங்டன் டிசியில் அளித்த இரவு விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர். அப்போது டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது டிரம்புக்கு இருவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்தியா-அமெரிக்கா உறவு இன்னும் ஆழமாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாக அம்பானி தெரிவித்தார்.