
ஹோவ்,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீராங்கனைகள் இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறினர். 20 ஓவர்கள் முழுமையாக வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அதிகபட்சமாக ஷெமைன் கேம்பல் 26 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல் மற்றும் அர்லாட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 82 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 9.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 82 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நாட் ஸ்கைவர்-பிரண்ட் 55 ரன்கள் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது.