
பெர்லின்,
ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது . இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடினார் . இதனால் ரூப்லெவ் 6-1,6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் பிளாவியோ கோபோலியை, ரூப்லெவ் எதிர்கொள்கிறார்.