மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

4 months ago 19

வெல்லிங்டன்,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 291 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக அன்னாபெல் சதர்லேண்ட் 105 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மோலி பென்போல்டு 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 30.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்திர்ந்த போது மழை வந்தது. இதையடுத்து ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

இதையத்து டி.எல்.எஸ் முறைப்படி 65 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி வரும் 23ம் தேதி நடக்கிறது.

Read Entire Article