ப்ரோபா 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் டிச.4-ல் ஏவப்படுகிறது

1 month ago 4

சென்னை: இந்திய விண்​வெளி ஆய்வு மையத்​தின் (இஸ்ரோ) கீழ் செயல்​படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறு​வனம் வெளி​நாட்டு செயற்​கைக்​கோள்களை விண்​ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்​கொண்டு வருகிறது. அதன்படி இதுவரை 430-க்​கும் மேற்​பட்ட வெளி​நாட்டு செயற்​கைக்​கோள்களை நியூ ஸ்பேஸ் நிறு​வனம் வெற்றிகரமாக விண்​ணில் செலுத்​தி​யுள்​ளது.

பெரும்​பாலான உலக நாடு​களின் விண்​வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலை​யில், அண்மை​யில் ஐரோப்பிய விண்​வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறு​வனத்​துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறு​வனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்​கொண்​டது. அதன்​படி, ப்ரோபா-3 எனப்​படும் இஎஸ்ஏ நிறு​வனத்​தின் இரு செயற்​கைக்​கோள்களை பிஎஸ்​எல்வி சி-59 ராக்​கெட் மூலம் புவியி​லிருந்து 60,500 கிமீ தொலை​வில் உள்ள சுற்று​வட்டப் பாதை​யில் நிலை நிறுத்தி சூரியனின் புற வெளி கதிர்கள் ஆய்வு செய்​யப்பட உள்ளன. அந்த இரு செயற்​கைக் கோள்​களும் 150 மீ தொலை​வில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்​கொண்டு தரவுகளை கட்டுப்​பாட்டு அறைக்கு அனுப்ப உள்ளன.

Read Entire Article