போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்

3 months ago 13

 

ஈரோடு, அக்.29: ஈரோடு மாவட்டத்தில் போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக காவலர் நல அங்காடி (போலீஸ் கேண்டீன்) சார்பில் பட்டாசு கடை அமைக்கப்படும். அதன்படி, நடப்பாண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் ஈரோடு எஸ்பி அலுவலகத்தின் போலீஸ் கேண்டீனிலும், கோபி, சத்தியமங்கலம், மாவட்ட ஆயுதப்படை வளாகம் என 4 பகுதியிலும் பட்டாசு கடை அமைக்கப்பட்டு, விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட வருவாய் துறை, தீயணைப்பு துறையின் அனுமதி பெற்று தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடை அமைக்க, தேவையான பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விற்பனையானது காலை முதல் இரவு வரை செயல்படுகிறது. ‘கிப்ட் பாக்ஸ்’ பட்டாசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை போலீசார் மட்டும் அல்லாது பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

The post போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article