சிவகங்கை, டிச.3: சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 165 போலீசாருக்கு, நேற்று இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையம் 5 உட்பட 49 காவல்நிலையங்கள், மாவட்ட அளவில் டிசிபி, டிசிஆர்பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். தேர்தல்களையொட்டி போலீசாரை இடமாறுதல் செய்வது வழக்கம்.
இந்நிலையில் ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் 3 ஆண்டுக்கு மேல் ஏராளமான போலீசார் பணியாற்றி வந்தனர். இதையடுத்து போலீசார் முதல் ஏட்டு, எஸ்எஸ்ஐ வரை 3 ஆண்டுக்கு மேல் ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு நேற்று சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் சீனியாரிட்டி அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்பட்டு பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
The post போலீசாருக்கு இடமாறுதல் கவுன்சிலிங் appeared first on Dinakaran.