போலி கணக்கு மூலம் ரூ.1.75 கோடி கையாடல் பெண் தலைமை கணக்காளர் கைது: 2 மகள்கள், தாய் பெயரில் அதிகளவு சொத்து வாங்கி குவித்தது அம்பலம்

3 weeks ago 5

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஸ்ரீராகவேந்திரா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார் (54) புகார் ஒன்று அளித்தார். அதில், பெசன்ட் நகர் பகுதியில் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது அலுவலகத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, சாந்தி என்பவர் நிர்வாக உதவியாளராக ரூ.7 ஆயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார். 10 ஆண்டுகள் பணி செய்ததால் அவருக்கு நிறுவனத்தின் தலைமை கணக்காளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, மாத ஊதியமாக ரூ.61,090 வழங்கப்பட்டு வந்தது. இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி, மின்னஞ்சல் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

அப்போது நிறுவனத்தின் வரவு செலவு தொடர்பாக, 2023-24ம் ஆண்டுக்கான அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில், பண பரிமாற்றம் முன்னுக்கு பின் முரணாக இருந்தால், நான் வங்கிக்கு கடிதம் எழுதி, ஆண்டு கணக்கு விவரங்களை கேட்டேன். அதன்படி வங்கி அதிகாரிகள், எனது நிறுவனத்தின் வங்கி கணக்கு வரவு செலவு விவரங்களை அளித்தனர். அதை வைத்து பார்த்தபோது, சாந்தி அளித்த வங்கி கணக்கு மற்றும் வங்கி அளித்த கணக்கு முரண்பட்டதாக இருந்தது. அதை ஆய்வு செய்த போது, சாந்தி போலியாக வங்கி கணக்கு விவரங்களை அளித்தது தெரியவந்தது.

அதை ெதாடர்ந்து சாந்தி கணக்கு அதிகாரியாக பதவி ஏற்ற ஜனவரி 2022 முதல் மார்ச் 2024ம் ஆண்டு வரையிலான கணக்குகளை ஆய்வு செய்த போது, 1 கோடியே 73 லட்சத்து 2,268 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. சாந்தி நம்பிக்கைக்குரிய வகையில் எனது நிறுவனத்தில் பணி செய்ததால் நிறுவனத்தின் அனைத்து கணக்கு வழக்குகளும் அவரே செய்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் எனது உறவினர்கள் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டதால், அவர்களை கவனிக்க வேண்டி இருந்ததால், நிறுவனத்தின் அலுவல் பணிகள் சரியாக கவனிக்க முடியாத நிலை இருந்தது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட நிறுவனத்தின் தலைமை கணக்காளர் சாந்தி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவுக்கு போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்திய போது, ஸ்ரீராகவேந்திரா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தலைமை கணக்காளர் ரூ.1.73 கோடி மோசடி செய்ததும், அந்த பணத்தை சாந்தி, கல்லூரியில் படித்து வரும் 2 மகள்கள் மற்றும் தாய் பெயருக்கு மாற்றியதும், அவர்கள் பெயிரில் சொத்து வாங்கி குவித்ததும் தெரியவந்தது.
அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் அடையாறு பரமேஸ்வரி நகர் 2வது ெதருவில் வசித்து வரும் சாந்தி மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த சாந்தி தலைமறைவாகிவிட்டார்.
பின்னர் தீவிர தேடுதலுக்கு பறிகு சாந்தி ஓசூரில் பதுங்கி இருப்பது மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓசூர் விரைந்த தனிப்படை போலீசார் கடந்த 22ம் தேதி சாந்தியை கைது செய்தனர்.
மேலும், மோசடி பணத்தை பறிமுதல் செய்வது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post போலி கணக்கு மூலம் ரூ.1.75 கோடி கையாடல் பெண் தலைமை கணக்காளர் கைது: 2 மகள்கள், தாய் பெயரில் அதிகளவு சொத்து வாங்கி குவித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Read Entire Article