கெட்ட பழக்கங்களை விட்டு 5 ஆண்டுகள் ஆகிறது - விஷால்

4 hours ago 2

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. 'மதகஜராஜா' புரோமோஷன் விழாவில் கை நடுங்க, வாய் குளறி அவர் பேசியது பல சர்ச்சைகளை உருவாக்கியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டதால் பரபரப்பு உருவானது. ஆனால் வைரல் காய்ச்சலே காரணம் என்று விஷால் தரப்பினர் விளக்கம் கொடுத்தனர். உரிய சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்தார்.

இதற்கிடையில் விழுப்புரத்தில் நடந்த கூவாகம் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஷால், மேடையிலேயே மயங்கி சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அளவுக்கு அதிகமான கூட்டம், சாப்பிடாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றதே மயக்கத்துக்கு காரணம் என்று அவரது மேனேஜர் ஹரி விளக்கம் கொடுத்தார்.

இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்து விஷால் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "மது, சிகரெட் என எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை. இது என்னை பாதிக்கவும் செய்யாது.

நான் சீக்கிரம் மீண்டு வருவேன். எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார். இது விஷாலின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Read Entire Article