போர் நிறுத்தம்: காஷ்மீர் முதல்-மந்திரி வரவேற்பு

5 hours ago 2

புதுடெல்லி,

இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டன. நேற்றிரவு முழுவதும் மத்தியஸ்தம் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. இதில், முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்த முடிவை வரவேற்கிறேன். இந்த முடிவு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு வந்திருந்தால், உயிரிழப்புகள், பொருட் சேதங்கள் ஏற்பட்டிருக்காது.மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவது ஜம்மு காஷ்மீர் அரசின் கடமை.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article