
புதுடெல்லி,
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டன. நேற்றிரவு முழுவதும் மத்தியஸ்தம் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. இதில், முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், போர் சூழல் காரணமாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் அடுத்த வாரத்தில் மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது .
வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .