சென்னை: அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்க கோரிய விண்ணப்பத்குக்கு அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் மனுசெய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 5 நாட்களிலிருந்து 10 நாட்களாக அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அக்கட்சியினருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால் ரூ.1 கோடி இழப்பீடு கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டனர்.
The post போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அதிகரிக்கும் வகையில் சட்டதிருத்தம்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.