பிலிப்பைன்சில் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபருக்கு எதிராக தேசத் துரோக புகார்

5 hours ago 2

மணிலா: பிலிப்பைன்சில் துணை அதிபர் சாரா டூடர்டேவுக்கு எதிராக தேசதுரோகம் உள்பட கிரிமினல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிலிப்பைன்சில் அதிகரித்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே தான் கொலை செய்யப்பட்டால், அதிபர் மார்கோசை கொல்வதற்காக ஒரு கொலையாளியை ஒப்பந்தம் செய்திருப்பதாக துணை அதிபர் சாரா டூடர்டே கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னாள் துணை அதிபருக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு பணியகத்தின் இயக்குனர் ஜெய்ம் சாண்டியாகோ செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ‘‘துணை அதிபருக்கு எதிராக தேசத்துரோகத்தை தூண்டுதல் மற்றும் கடுமையான மிரட்டல் தொடர்பான புகார்கள் நீதித்துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்களை முற்றிலும் நிரகாரிக்க வேண்டுமா அல்லது நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமா என்பதை நீதித்துறை முடிவு செய்யும்” என்றார்.

The post பிலிப்பைன்சில் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபருக்கு எதிராக தேசத் துரோக புகார் appeared first on Dinakaran.

Read Entire Article