ஜெனீவா: வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின்போது அடக்குமுறையில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று ஐநா மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையின் போது சுமார் 1400 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று ஐநா தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் இயங்கி வரும் ஐநாவின் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பல்வேறு நம்பகமான ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஜூலை 1முதல் ஆகஸ்ட் 15 வரை நடந்த போராட்டங்களில் சுமார் 1400 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து இருக்கலாம். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வங்கதேச பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம். போராட்டங்களை அடக்குவதற்கான ஒரு வழியாக அரசியல் தலைமை மற்றும் உயர்பாதுகாப்பு அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் சட்டத்திற்கு புறம்பான கொலைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புகாவலர்கள், சித்ரவதைகள் நடத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தின்போது 1400 பேர் கொலை: ஐநா மனித உரிமை பிரிவு மதிப்பீடு appeared first on Dinakaran.