போப் பிரான்சிஸ் பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவு

4 hours ago 2

ரோம்: கத்தோலிக்க மத தலைவராக போப் பிரான்சிஸ் பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றது. கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் பிப்ரவரி 14ம் தேதியில் இருந்து ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரட்டை நிமோனியாவில் இருந்து அவர் படிப்படியாக மீண்டு வருகின்றார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக இந்த வாரம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவரது உடல் நிலையின் சிக்கலான தன்மை மற்றும் ஒட்டுமொத்த பலவீனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் போப்புக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் குறிப்பிடப்படாத நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகின்றது. மேலும் அதிக நாட்கள் மருத்துவமனையில் போப் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. போப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரது புகைப்படம் அல்லது வீடியோவை வாடிகன் வெளியிடவில்லை.

The post போப் பிரான்சிஸ் பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article