பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு: தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

21 hours ago 4

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், பூந்​தமல்லி - பரந்​தூர் வரை நீட்​டிப்​புக்கு விரி​வான திட்ட அறிக்​கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் நேற்று முன்​தினம் சமர்ப்​பித்​தது. சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 3 வழித்​தடங்​களில் 116.1 கி.மீ. தொலை​வுக்கு பணி​கள் வேக​மாக நடை​பெறுகின்​றன.

இத்திட்​டத்​தில் கலங்​கரை​விளக்​கம் - பூந்​தமல்லி வரையி​லான 4-வது வழித்​தடத்தை பரந்​தூர் வரை நீட்​டிக்​க​வும், மாதவரத்​தில் இருந்து கோயம்​பேடு வழி​யாக சோழிங்​கநல்​லூர் வரையி​லான 5-வது வழித் தடத்தை கோயம்​பேட்​டில் இருந்து ஆவடி வரை நீட்​டிக்​க​வும் சாத்​தி​யக்கூறு அறிக்கை தயாரித்​து, தமிழக அரசிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

Read Entire Article