போக்குவரத்து போலீசார் சார்பில் இலவச மருத்துவ முகாம்

3 months ago 9

தக்கலை, பிப்.6 : தக்கலையில் போக்குவரத்து போலீசார் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருண் தலைமை வகித்தார். தக்கலை டிஎஸ்பி. பார்த்திபன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மக்கள் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உடற்பயிற்சியும், சந்தோஷமான மனநிலையும் இருந்தால் நோய்கள் வராது. தீயபழக்கங்கள் இருந்தால் அவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அதனை கைவிட வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிடுவது, ஆராக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலம் ேநாய்களை தவிர்க்க முடியும் என்றார். முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் கண் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் பயனடைந்தனர்.

The post போக்குவரத்து போலீசார் சார்பில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article