பொள்ளாச்சி வனச்சரகத்தில் சந்தனமரம் கடத்தலை தடுக்க துப்பாக்கியுடன் ரோந்து

1 week ago 3

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வனப்பகுதியில் சந்தன மரம் கடத்தல் சம்பவத்தை தடுக்க வனத்துறையினர் துப்பாக்கி ஏந்தி கூட்டு ரோந்து பணியை துவங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் சந்தன மரம் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் போத்தமடை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். பொள்ளாச்சி வனச்சரகர் ஞானவேல் முருகன் தலைமையில், போத்தமடையிலிருந்து கேரள எல்லை பகுதி வரையிலும். கேரள மாநிலம் கொல்லங்கோடு வனபகுதி அதிகாரி மணிகண்டன் தலைமையில், தேக்கடி முதல் போத்தமடை வரையிலும், சந்தன மரம் கடத்தல் சம்பவத்தை தடுக்க கூட்டுரோந்து பணி மேற்கொண்டனர்.

இப்பணியில், வனத்துறையினர் மறட்டுமின்றி, வேட்டைத்தடுப்பு காவலர்களும் ஈடுபட்டனர். அவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள வழித்தடம் வழியாகவும், செங்குத்தான இடங்களிலும் தனித்தனிக்குழுக்களாக சென்று ரோந்து பணியை மேற்கொண்டனர்.

சந்தனமரம் கடத்தல் சம்பவத்தை தடுக்க அடர்ந்த வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்வதால், பாதுகாப்பு நடவடிக்கைகாக துப்பாக்கி ஏந்தி தீவிர ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக-கேரள வன எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனங்கள் தணிக்கை மேற்கொள்ளும் பணியும் தீவிரமாக நடக்கிறது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி வனச்சரகத்தில் சந்தனமரம் கடத்தலை தடுக்க துப்பாக்கியுடன் ரோந்து appeared first on Dinakaran.

Read Entire Article