கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றவாளிகள் 30 நாட்களுக்குள் மேல் முறையீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்தார்.