பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 31,792 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்

1 week ago 2

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் நகராட்சி மற்றும் வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு பள்ளிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 1 முதல் 19 வயது வரையிலானவர்கள் மற்றும் 20 முதல் 30வயதுடைய பெண்களுக்கு என மொத்தம் 33,093 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு முகாமில், 31,792 பேருக்கு என 96 சதவீதம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 31,792 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம் appeared first on Dinakaran.

Read Entire Article