பொன்னமராவதி, ஜன.21: பணிமூப்பு காலங்களை 10 ஆண்டுகள் என்பதனை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வட்டத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார்,வட்டச் செயலாளர் விஜயா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில சங்க முடிவின்படி கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம்,கருணை அடிப்படையில் பணி நியமனம்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க கோருதல்,இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்குதல், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதனை 30 சதவீதமாக வழங்குதல், பணிமூப்பு காலங்களில் 10 ஆண்டுகளில் என்பதனை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள கிராம உதவியாளருக்கு ஓட்டுநர் பணி வழங்குதல், ஜமாபந்தி சிறப்பு படி வழங்குதல்,
கிராம உதவியாளர் பணி தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிற ஜனவரி 23-ம் தேதி பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பிப்ரவரி 5-ம் தேதி மாலை பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் வட்ட பொருளாளர் இளவரசி நன்றி கூறினார்.இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாண்டியன், யாசர்,மாவட்ட இணை செயலாளர் சின்னத்துரை,துணைத் தலைவர் சேவுக காமராசு,துணைச் செயலாளர் மணிராஜ்,வட்டப் பிரதிநிதி அம்பாள் கற்பகம், பொன்னமராவதி சரக தலைவர் கமலம்,அரசமலை சரக தலைவர் பாண்டிச் செல்வம்,காரையூர் சரக தலைவர் வடிவேல்மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post பொன்னமராவதியில் வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.