பொன்னமராவதி மார்ச் 19: பொன்னமராவதியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு பேரூந்து நிறுத்தம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி திருப்பத்தூர் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இதன் அருகில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம், கால்நடை மருத்துவமனை ஆகியவை உள்ளது.
இந்த முக்கிய பகுதியில் இருந்து வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரிக்கு செல்லும் ஒரு சாலையும், திருப்பத்தூர் செல்லும் சாலையும், பஸ் ஸ்டாண்டு செல்லும் சாலையும் என மூன்று புறமும் சாலை உள்ளது. இந்த இடத்தில் பள்ளி மாணவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என எந்த நேரம் மக்கள் பேருந்திற்கு காத்திருக்கின்றனர். ஆனால் இங்கே பேரூந்து நிறுத்தம் இல்லாத நிலையில் வெயில், மழை என நின்று தான் பேரூந்துக்காக நின்று வேண்டிய நிலையுள்ளது. என பொதுமக்கள் நலன் கருதி இந்த இடத்தில் ஒரு பேரூந்து நிறுத்தம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பொன்னமராவதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.