வொர்க்  ஃப்ரம் ஹோம் போயாச்சு...  வொர்க் ஃப்ரம் களம் வந்தாச்சு! - மக்கள் பிரச்சினையில் வரிந்து கட்டும் தவெக

3 hours ago 2

வொர்க் ஃப்ரம் ஹோம் மோடிலேயே கட்சி நடத்துகிறார் என விஜய்யை அவரைப் பிடிக்காதவர்கள் கிண்டலடித்த நிலையில், அந்த அவச்சொல்லை போக்குவதற்காக களத்துக்கு வந்து மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து போராட ஆரம்பித்துவிட்டார்கள் தவெக தொண்டர்கள்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கு​வ​தால் அதி​முக-​வும் பாஜக-​வும் போட்டி போட்​டுக் கொண்டு திமுக அரசுக்கு எதி​ரான பிரச்சினைகளை கையிலெடுத்து வாள் சுழற்றி வரு​கின்​றன. இந்​தச் சூழலில், “அடுத்த 60 வாரங்​களுக்கு விஜய் தான் எதிர்க்​கட்சி தலை​வ​ராக இருக்​கப் போகி​றார். அவர் மக்​களோடு மக்​களாக களத்​துக்கு வரப் போகி​றார்” என்​றெல்​லாம் தவெக தரப்​பில் எதிர்​பார்ப்​பு​களை எகிற​வைத்து வரு​கி​றார்​கள். அதற்கு முன்​னோட்​ட​மாக அதி​முக, பாஜக-வுக்கு போட்​டி​யாக தவெக-​வினரும் மக்​கள் பிரச்​சினைகளுக்​காக களத்​துக்கு வந்​திருக்​கி​றார்​கள்.

Read Entire Article