பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 month ago 9

சென்னை: அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். பணியாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்: நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800-ஐ போனஸ் ஆக பெறுவர். போனஸ் அறிவிப்பால் 2.75 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.369.65 கோடி கருணைத் தொகையாக தரப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகை வழங்கப்படும். போக்குவரத்து, மின்துறையில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

The post பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article