புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பிரம்மோஸ் ஏவுகணை 2005ம் ஆண்டு இந்திய கடற்படையிலும், 2007ம் ஆண்டு இந்திய ராணுவத்திலும் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் வான்வழியில் ஏவும் பிரம்மோஸ் ஏவுகணையானது 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தான். பிரம்மோஸ் ஏவுகணை இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது நிர்வாகத்தின் தொடர்ச்சியில் மற்றொரு குறிப்பிடத்தக்க சான்றாகும். இது டெல்லியில் இன்றைய ஆளும் நிர்வாகத்தின் வழக்கமான பழக்கமாக இருந்தாலும் மறுக்கவோ, அழிக்கவோ முடியாத சான்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தான் பிரம்மோஸ் ஏவுகணை சேர்ப்பு: காங்கிரஸ் appeared first on Dinakaran.