புதுடெல்லி: பாஜவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘பிரதமர் மோடியின் முடிவும், நமது ஆயுதப்படைகளின் அசாத்திய துணிச்சலும் தீவிரவாத தளங்களை தரைமட்டமாக்கியுள்ளன. இது மோடியின் வாக்குறுதியாகும். மே 7ம் தேதி தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் அதன் இலக்குகளில் 100 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்தியா எடுத்த ராணுவ மற்றும் ராணுவம் சாராத நடவடிக்கையானது முன்னெப்போதும் இல்லாதது. மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு தீர்க்கமான செய்தியை அனுப்பியுள்ளது. அண்டை நாட்டின் எந்த பகுதியும் தன்னால் அடைய முடியாது அல்ல என்பதை இந்தியா காட்டியுள்ளது” என்றார்.
The post தீவிரவாதிகளுக்கு எதிரான போர் 100% வெற்றி: பாஜ பெருமிதம் appeared first on Dinakaran.