பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கண்காணிக்க AI சிசிடிவி கேமரா: சென்னை மாநகராட்சி முடிவு

3 months ago 14

சென்னை : பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் சுகாதாரம் தொடர்பான விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. விதிமீறி குப்பைகளை கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி டிஜிட்டல் முறையில் ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணைய குமரகுருபரன் கூறியதாவது; சென்னையில் பொதுஇடங்களில் குப்பை கொட்டுவதை கண்காணிக்க AI கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் AI தொழில்நுட்பத்துடன் ‘சிசிடிவி’ கேமரா விரைவில் அமைக்கப்படும். சென்னையில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2.25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இது போன்ற நடவடிக்கையின் மூலம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கண்காணிக்க AI சிசிடிவி கேமரா: சென்னை மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article