கார்கில்: லடாக் யூனியன் பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு வசதியாக கார்கில்-ஸ்ரீநகர் மற்றும் கார்கில் – ஜம்மு வழித்தடங்களில் குறிப்பிட்ட நாட்களில் கார்கில் கூரியர் சேவை செயல்படுகின்றது.
இந்நிலையில் குளிர்காலம் தொடங்கியதை அடுத்து ஏஎன்-32 கார்கில் கூரியர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் நானான நேற்று கார்கில் மற்றும் ஸ்ரீநகர் இடையே சிக்கி தவித்த 24 பயணிகள் இந்திய விமானப்படை மூலமாக மீட்கப்பட்டனர். கார்கிலில் இருந்து ஸ்ரீநகருக்கு 12 பயணிகளும், ஸ்ரீநகரில் இருந்து கார்கிலுக்கு 12 பயணிகளும் கூரியர் சேவையில் பயணம் செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
The post கார்கில்-ஸ்ரீநகர் இடையே சிக்கித்தவித்த 24 பயணிகள் மீட்பு appeared first on Dinakaran.