
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் பரவலாக அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அரசு மற்றும் பொது இடங்களில், நடைபாதைகளில், நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 7 ஆம் நாள் அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது.
எனவே, சென்னை ஐகோர்ட்டின் ஆணையில் கூறப்பட்டுள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கள் பகுதியில் உடனடியாக அகற்றி அதன் விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஐகோர்ட்டின் ஆணைக்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார் .