பொங்கல் விளையாட்டு விழா

2 weeks ago 2

சோமனூர், ஜன.17: கிட்டாம்பாளையம் கிராமத்தில் 53ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இளைஞர் கலை மன்றம் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிக்கு கிட்டம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் அப்பன் ரங்கசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஎம்சி.சந்திரசேகர் மற்றும் கௌசிகாநதி சீரமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் பாலசுப்பிரமணியம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ரங்கசாமி, எல்ஐசி சபாபதி காளியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஐந்தாண்டு காலம் சிறப்பாக பணியாற்றிய கிட்டாம்பாளையம் ஊராட்சியின் முன்னால் மன்ற தலைவர் விஎம்சி. சந்திரசேகருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் `வேல்’ பரிசாக வழங்கி கௌரவித்தனர்.
இதேபோன்று கிட்டாம்பாளையம் ஊராட்சி குளத்துப்பாளையத்திலும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கருமத்தம்பட்டி போலீஸ் எஸ்ஐ ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

The post பொங்கல் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article