கூடலூர்- மசினகுடி சாலையில் 2 காட்டு யானைகள் சண்டை: வீடியோ வைரல்

2 hours ago 1

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள காட்டு யானைகள், மான்கள், மயில்கள், சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அவ்வப்போது சாலை ஓரங்களில் உலா வருவது வழக்கம். இதை வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.இந்த நிலையில் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி செல்லும் சாலையின் நடுவே நேற்று 2 ஆண் காட்டு யானைகள் சண்டையிட்ட காட்சியை அவ்வழியாக வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் பார்த்துள்ளனர்.

சாலை ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட இரண்டு ஆண் காட்டு யானைகளும் சண்டையிட்டபடி சாலையின் நடுவே வந்ததால் இருபுறமும் உடனடியாக வாகனங்கள் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து யானைகள் இரண்டும் சாலையில் இருந்து விலகி வனப்பகுதிக்குள் சென்றது. இதை தொடர்ந்து அவ்வழியாக மீண்டும் வாகனங்கள் இயக்கப்பட்டது. சாலையின் நடுவே 2 ஆண் காட்டு யானைகள் சண்டையிட்ட காட்சியை அவ்வழியாக வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

The post கூடலூர்- மசினகுடி சாலையில் 2 காட்டு யானைகள் சண்டை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article