சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்காக தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே திங்களன்று சிறப்பு புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு, மீண்டும் திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை முன்னிட்டு சென்னை திரும்புவோருக்கான சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே வரும் திங்களன்று (20.01.2025) அதிகாலையில் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 20ம் தேதி அதிகாலை 04.00, 04.30, 05.00, 05.45 மற்றும் 06.20 மணிக்கு காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதே போன்று ஜனவரி 20ம் தேதி அதிகாலை 05.05, 05.40 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து காட்டங்குளத்தூருக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோருக்காக தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே திங்களன்று சிறப்பு புறநகர் ரயில் இயக்கம்..!! appeared first on Dinakaran.