ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் பணிக்குழுவில் மேலும் 7 பேர் நியமனம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

4 hours ago 2

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் மேலும் 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமாரின் வெற்றிக்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், ஈரோடு மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள்.

அதன்படி, எம். கிறிஸ்டோபர் திலக், முன்னாள் எம்பி பெ.விஸ்வநாதன், மயூரா எஸ். ஜெயக்குமார், கோபிநாத் பழனியப்பன், வி.கே.அறிவழகன், பாபு (எ) வெங்கடாசலம், முகம்மது ஆரீப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் பணிக்குழுவில் மேலும் 7 பேர் நியமனம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article