காரைக்குடி: தமிழ்நாடு ஆளுநர் அரசியல் சாசனத்தின் வரம்பை மீறி செயல்படுகிறார் என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 21ம் தேதி காரைக்குடிக்கு வந்து திருவள்ளுவர் சிலையை திறக்கிறார். தொடர்ந்து வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு என ரூ.101 கோடி நிதி ஒதுக்கி சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி, தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, திருவள்ளுவரின் வரலாறு எதையும் தெரியாமல் தொடர்ந்து பிழை செய்து வருகிறார். ஆளுநர் அரசியல் சாசன விதிப்படி நடந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து அரசியல் சாசன வரம்பை மீறி செயல்படுகிறார். மோகன்பகவத் கூறிய கருத்தை நாங்கள் கடுமையாக கண்டித்துள்ளோம். பெரியார் தனிமனிதன் அல்ல. சமூக இழிவுகளை கடுமையாக எதிர்த்து வெற்றியை கண்டவர் பெரியார். அதனை புரிந்து கொள்ளாமல் பேசுகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் கட்சி வேட்பாளர் நிற்கிறார். அங்கு பெரியாரை பற்றி சொல்லி பார்க்கட்டும். மோசமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநர் ரவி செயல்படுகிறார்: ப.சிதம்பரம் தாக்கு appeared first on Dinakaran.